உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

எரியோடு: எரியோடு குருக்களையன்பட்டியில் விநாயகர், சாலை காளியம்மன், ரெணவித்தர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் என். எஸ்.,நகர் பிரசன்ன வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிசாமி, காந்திராஜன் எம்.எல்.ஏ., மகன் சிவக்குமார், ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சித் தலைவர் முத்துலட்சுமி, ஒக்கலிகர் சங்க செயலாளர் நடராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை