கோயில் கும்பாபிஷேகம்
வடமதுரை, ஆக.28- வடமதுரை அம்பலகாரன்பட்டியில் விநாயகர், மாரியம்மன், மந்தை முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் கிராம தேவதைகளுக்கு கனி வைத்து தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் விழா துவங்கியது. 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர்கள் ஜெகநாதன், சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். சுற்று வட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.