உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் தயராகும் தற்காலிக பார்க்கிங் : கலெக்டரின் புதுவித யுக்திக்கு வரவேற்பு

கொடைக்கானலில் தயராகும் தற்காலிக பார்க்கிங் : கலெக்டரின் புதுவித யுக்திக்கு வரவேற்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் துவங்கும் சீசனுக்காக தற்காலிக பார்க்கிங் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி ,கோடை விழா நடப்பது வழக்கம். இதற்காக லட்ச கணக்கான பயணிகள் குவிய போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதியின்றி பயணிகள் அல்லல்படுவது வழக்கம். இதற்கு தீர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் அனைத்துறை அதிகாரிகளின் ஆலோசணைக் கூட்டம் சடங்காக நடந்தன. இருந்தும் காட்சிகள் மாறாத நிலையில் பயணிகள் தவித்தனர். இரு வாரத்திற்கு முன் சீசனுக்கான அனைத்துறை அதிகாரிகள் கூட்டம் கலெக்டர் சரவணனன் தலைமையில் நடந்தது. சுற்றுலா தலங்களை ஆய்வு செய்த கலெக்டர் அடிப்படை வசதி ஏற்படுத்துதல், பார்க்கிங் வசதி உருவாக்குதல், பயணிகள் சிரமமின்றி சீசனுக்கு வந்து செல்லும் நிலையை உருவாக்க அறிவுறுத்தினார். இதன் முதற்கட்டமாக ரோஜா பூங்கா அருகே ஆக்கிரமிப்பு மீட்பு பகுதியில் நகராட்சி பார்க்கிங் வசதியை ஏற்படுத்தும் பணி துவங்கியது. பஸ்ஸ்டாண்ட் பகுதி அரசு போக்குவரத்து கழக இடத்தில் தற்காலிக பார்க்கிங், வட்டக்கானல் வருவாய் நிலம், பசுமை பள்ளதாக்கு, வனச் சுற்றுலா தல பகுதி உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தும் பணி நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை சில மாதங்களுக்கு முன் மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிரப்பு அகற்றிய பகுதியை விரிவுப்படுத்தி மேம்படுத்தும் பணியும் நடக்கின்றன. கலெக்டரின துரிதமான செயல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை