உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீவிரவாதிகள் தாக்குதல்: பா.ஜ., அஞ்சலி

தீவிரவாதிகள் தாக்குதல்: பா.ஜ., அஞ்சலி

ஒட்டன்சத்திரம்: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஒட்டன்சத்திரம் நகரம், கிழக்கு ஒன்றிய பா.ஜ.,சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் நகர பா.ஜ., சார்பில் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் குமார்தாஸ், கிழக்கு ஒன்றியம் சார்பில் செக்போஸ்ட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் தலைமை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் முனியப்பன், முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் ருத்திர மூர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை, பொதுச் செயலாளர்கள் சசிகுமார், பாலசுப்பிரமணி, வரதராஜ், நிர்வாகிகள் சூர்யா, மூர்த்தி, சரவணகுமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ