வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விடியலில் வசதிகள் இருந்தால்தான்"ஆச்சரியமே? இல்லைனா ஆச்சரியம் இல்லை?
கழகங்களால் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் தான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு
ஆண்டுதோறும் கார்த்திகை முதலே பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் தைப்பூச விழா பாதையாத்திரை பயணம் துவங்குவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதி மட்டுமின்றி தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மெட்டூர்-மூலச்சத்திரம் வழித்தடத்திலும், நத்தம் வழியே வரும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் ரெட்டியார்சத்திரம்- ஒட்டன்சத்திரம் தடத்திலும், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலுார் , கடலுார் மாவட்ட பக்தர்கள் வடமதுரை வழியாகவும், கரூர் மாவட்டத்தில் இருந்து வேடசந்துார்-,ஒட்டன்சத்திரம் வழியாகவும் பாதயாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஜனவரியில் தைப்பூச விழா முடிந்த பின்பும் பங்குனி உத்திரம் வரை பக்தர்களின் பாதயாத்திரை பயணம் இருக்கும். இந்தாண்டு பக்தர்களின் வருகை 2 மாதங்களுக்கு முன் துவங்கியது. பனிப்பொழிவால் பகலில் ஓய்வு மாலை முதல் மறுநாள் காலை வரை பயணம் தொடர்கின்றனர்.திண்டுக்கல் -ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் 63 கிலோமீட்டர் துாரத்திற்கு ரோட்டோரத்தில் பேவர் பிளாக் மூலம் தனி நடைபாதை அமைக்கப்பட்டது. போதிய கண்காணிப்பு, பராமரிப்பின்றி சேதமடைந்ததுடன் வழித்தட கிராமங்களில் தனியார் கடைகள், வீடுகளுக்கான முன் பகுதியை நீட்டித்து ஆக்கிரமித்து உள்ளனர். பிற இடங்களில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. பல பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் மாயமாகி உள்ளது.சம்பந்தப்பட்ட வழித்தடங்கள் 4 வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி பல மாதங்களாகிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் ஆமை வேகத்தில் நடந்த பணியால் தற்போது பல இடங்களில் ரோடு சிதைந்து உள்ளது. பாதயாத்திரை நடைபாதையை வெறுமனே சிப்ஸ் ஜல்லி துகள்களால் மேவியுள்ளனர். இவை பெரும்பாலான இடங்களில் முழுமையாக சேதமடைந்து பாதசாரிகள் கால்களை பதம் பார்ப்பவையாக மாறி உள்ளன.செம்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி தடத்திலான தற்போதைய ரோட்டில் 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது. அச்சாம்பட்டி முதல் மூலச்சத்திரம் வரையிலான விரிவாக்க பணியில் பக்தர்களுக்கான நடைபாதை வசதி, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி முழுமையின்றி பல இடங்களில் புதர் செடிகள் அடர்ந்துள்ளன. போதிய போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் பக்தர்கள் ஓய்விடங்களில் அலைபேசி , பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. குறுகிய ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் ரோட்டின் நடுப்பகுதி வரை நடந்து செல்கின்றனர். இப்பிரச்னையால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.நடைபாதையில் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. ஓட்டல், டீக்கடை, உணவு பலகாரம், பழங்கள், இளநீர் விற்பனை என வழி நெடுகிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளது. தார் ரோட்டின் விளிம்பு வரை கூடாரம், அமர நாற்காலிகள் என ஆக்கிரமிக்கின்றனர்.சீசன் நேரங்களில் பக்தர்கள் நடுரோட்டில்நடப்பதால் விபத்துக்கள் தொடர்கிறது.குறுகிய பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் , ஒரு வழிப்பாதை போன்ற பிரச்னைகளால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.குறுகிய பகுதிகளான செம்மடைப்பட்டி, முத்தனம்பட்டி, ரெட்டியார்சத்திரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒட்டன்சத்திரம்
குழந்தை வேலப்பர் கோயில் வெளியே பக்தர்களின் நடைபாதையில் குப்பையை கொட்டி வைத்துள்ளனர். சாமியார் புதுாரிலும் இதே நிலைதான் உள்ளது. கணக்கன்பட்டி வரை புதிதாக பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் அள்ளப்படாமல் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. ஒர்க் ஷாப் வெளியே பக்தர்கள் நடக்கும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைத்து இடையூறு செய்கின்றனர்.பல லட்ச ரூபாய் மதிப்பிலான வழித்தடத்தின் பயன் முழுமையாக பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் இப்பிரச்னைகளை களைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூலம் பக்தர்களுக்கு குழந்தை வேலப்பர் கோயில், ஒட்டன்சத்திரம் பழநிக்கு இடைப்பட்ட இடங்கள், ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்து கொடுக்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் குளிக்கும் இடம், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இந்த தேவைகளை தைப்பொங்கலுக்கு முன்னர் வரும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் முன்கூட்டியே செய்து தர வேண்டும் . பழநி
புது தாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, உடுமலை, மடத்துக்குளம் ரோடு பகுதிகளில் உள்ள நடைபாதையில் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. ஆக்கிரமிப்புகளும் அதிகம் உள்ளன. சில இடங்களில் சேதத்தால் பக்தர்கள் ரோட்டில் இறங்கி நடக்கும் நிலை உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.உடுமலை-மடத்துக்குளம் ரோடு வழியாக வரும் பக்தர்கள் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் நடந்து வருகின்றனர். இதனால் அதிவேகமாக வரும் வாகனங்களில் விபத்துகளில் நிலை ஏற்படுகிறது. பக்தர்கள் பாதையாத்திரைக்கு என உள்ள உரிய பாதையில் நடந்து வர வேண்டும்.அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் பல இடங்களில் ரோடு குறுகிய அகலம், மழைநீர் கடந்து செல்லும் சேதமடைந்த குழாய்கள், போதிய பாதுகாப்பற்ற ரோட்டோர பணிகளால் விபத்துக்கள் அதிகரிப்பு பிரச்னைகள் உள்ளன.
விடியலில் வசதிகள் இருந்தால்தான்"ஆச்சரியமே? இல்லைனா ஆச்சரியம் இல்லை?
கழகங்களால் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் தான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு