நூற்பாலை தொழிலாளி காயம்; வழக்கு பதிவு
வேடசந்துார் : கேதையெறும்பு கொல்லப்பட்டி காலனியைச் சேர்ந்தவர், நூற்பாலை தொழிலாளி பெருமாள் 40. வேடசந்தூர் மன்னார்கோட்டை தனியார் நூற்பாலையில் காண்ட்ராக்ட் அடிப்படையில் பிட்டர் வேலை பார்த்து வந்தார். இயந்திரங்களை கழட்டி மாட்டும்போது மிஷின் பிளேடு உடைந்து விழுந்ததில் இடது கால் கட்டை விரலில் நரம்பு வெட்டப்பட்டு காயம் அடைந்தார். ரெட்டியார்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெருமாளுக்கு, நூற்பாலை நிர்வாகம் முழுமையாக மருத்துவச் செலவை ஏற்கவில்லை. தொடர்ந்து பெருமாள் மனைவி ஜெயக்கொடி புகாரின் பேரில், நூற்பாலை காண்ட்ராக்டர் சவுந்தரராஜா, நிர்வாகப் பொறுப்பில் இருந்த ரெட்டியார்சத்திரம் பார்த்தசாரதி ஆகியோர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.