மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
01-Feb-2025
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் இன்று (பிப். 5) கொடியேற்றத்துடன் தைப்பூசத்திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் துவங்க உள்ளது.இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடி மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருள்வார். பின் காலை 10:50 மணிக்கு மேல் காலை 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இரவு புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா நடக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i39zmdh9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு பிப்.10 திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை வெள்ளி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. பிப்.11ல் அதிகாலை 5:00 மணிக்கு தோளுக்கினியானில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடக்கவுள்ளது. மாலை 4:45 மணிக்கு தைப்பூச திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கிறது. பிப்.14 மாலை தெப்பத்தேர் திருவிழா நடந்து அன்று இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா முடியும்.விழா நாட்களில் புதுச்சேரி சப்பரம், தந்த பல்லாக்கு, வெள்ளி ஆட்டுக்கடா, பெரிய தங்கமயில், காமதேனு, தங்க குதிரை, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் தைப்பூச கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
01-Feb-2025