மேலும் செய்திகள்
மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 1457 மி.மீ., மழை
16-Oct-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் ஒரே நாளில் 335 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் இம்மாதம் தொடக்கம் முதலே மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு மேல் பெய்யும் மழை சீரான இடைவெளியில் இரவு வரை நீடிக்கிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேக மூட்டத்துடனேயே இருந்த நிலையில் திண்டுக்கல்,வேடசந்துார், நத்தம், ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை, பழநி பகுதிகளில் மழை விடாது பெய்தது.அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 335.20 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நத்தத்தில் 72 மி.மீ., காமாட்சிபுரத்தில் 53 மி.மீ., வேடசந்துாரில் 49 மி.மீ., பெய்துள்ளது.
16-Oct-2024