உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காரை மோத செய்து திருப்பூர் வாலிபரை வெட்டிய கும்பல்

காரை மோத செய்து திருப்பூர் வாலிபரை வெட்டிய கும்பல்

ரெட்டியார்சத்திரம்: தாடிக்கொம்பு ஸ்டேஷன் வழக்கு விசாரணைக்காக வந்த திருப்பூர் வாலிபரை காரை மோத செய்து அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.திருப்பூர் மாவட்டம் முருக பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி பிரசாத் 22. இவரது நண்பர் வசந்த் 22. இருவரும் நேற்று முன்தினம் வாடகை காரில் தாடிக்கொம்பு போலீஸ் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வந்திருந்தனர். திண்டுக்கல்லில் தங்கிய இருவரும் நேற்று ஸ்டேஷனில் ஆஜராகி விட்டு திருப்பூர் புறப்பட்டனர். ரெட்டியார்சத்திரம் அருகே பின் தொடர்ந்து வந்த கார் மோதியதால் ரோட்டோரத்தில் நிறுத்தினர். காரில் இருந்து இறங்கிய குமபல் வசந்தை அரிவாளால் வெட்டியது. ஹரிபிரசாத் அவ்வழியே வந்த டூவீலரில் ஏறி மாயமானார். வசந்த் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !