கூலித்தொழிலாளி அடித்து கொலை
செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் அருகே சொத்து பாகப்பிரிவினை தகராறில் அண்ணனை ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை செய்த தம்பியை போலீசார் தேடுகின்றனர்.கூத்தம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மராஜ் 50. இவருக்கும் இவரது சகோதரர் வெள்ளைச்சாமி 46, இடையே சொத்து பாகப்பிரிவினை நடந்தது.நேற்று தோட்டத்து சாலையில் இருந்த தகர கூரையை எடுக்க சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட வெள்ளைச்சாமி ஆதரவாளர்களுடன் சேர்ந்து தர்மராஜை தென்னை மட்டைகளால் தாக்கினார். மயங்கிய தர்மராஜை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். வெள்ளைச்சாமி, அவரது ஆதரவாளர்களை செம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.