மேலும் செய்திகள்
குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமனம்
22-Oct-2024
வடமதுரை:''மருத்துவமனைகளில் மருத்துவ நிலைய பாதுகாப்புச் சட்டம் குறித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், அதை பயன்படுத்தாமல் ஆழ்ந்த துாக்கத்தில் வைத்திருப்பதால் டாக்டர்கள், சுகாதார களப்பணியாளர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன''என சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அவர் கூறியதாவது:சென்னை அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பாலாஜி, ஹரிஹரன், சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் நவரத்னா நகரில் ஆய்வுக்கு சென்ற சுகாதார ஆய்வாளர் ஜெயசூர்யா ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்களை கண்டிக்கிறோம். மருத்துவமனைகளில் மருத்துவ நிலைய பாதுகாப்பு சட்டம் குறித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அதை பயன்படுத்தாமல் ஆழ்ந்த துாக்கத்திலே வைத்திருக்கின்றனர்.இதனால் களப்பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அனைத்து பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் ஆங்காங்கே நடப்பது தொடர்கிறது. மருத்துவ நிலைய பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும், களப்பணியாளர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.செவிலியர்களுக்கு இருக்கும் நர்சிங் கவுன்சில் போல் சுகாதார ஆய்வாளர்கள் கவுன்சில் ஏற்படுத்தி சீனியாரிட்டியை முறைப்படுத்த வேண்டும். உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்படி ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நிலை-1 என்பதும், துணை சுகாதார நிலையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நிலை-2ம் நியமிக்க வேண்டும். 2003க்கு பிறகு உருவான 400க்கு மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர் நிலை-1 பணியிட அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை என்றார்.
22-Oct-2024