மேலும் செய்திகள்
சாத்துாரில் பெண்களிடம் நகை பறிப்பு * 3 பேர் கைது
07-Sep-2024
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில், தனியார் சோப்பு கம்பெனி முன் டீக்கடை நடத்தி வருபவர் குன்னம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி தனலட்சுமி, 80. நேற்று முன்தினம் இரவு கடையில் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் மூதாட்டியை தட்டி எழுப்பி, கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி, மூக்குத்தி உள்ளிட்ட நகையைப் பறித்து தப்பினார். வேடசந்துார் போலீசார், சேனன்கோட்டை பகுதியில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த பிரபு 28, என்பதும், மூதாட்டியிடம் நகை பறித்ததும் தெரிந்து, அவரை கைது செய்தனர்.
07-Sep-2024