இரட்டிப்பான பீன்ஸ் விலை
ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை ஒரே வாரத்தில் இரட்டிப்பாகி ரூ.15 விருந்து ரூ.30 க்கு விற்பனை ஆனது.ஒட்டன்சத்திரம், மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, பால் கடை, கண்ணனுார் உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை அறுவடை தொடர்ந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.15 க்கு விற்பனை ஆனது. தற்போது அறுவடை முடியும் நிலையில் உள்ளதால் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக பீன்ஸ் விலை இரட்டிப்பாக அதிகரித்து கிலோ ரூ. 30 க்கு விற்பனையானது.இனி வரும் நாட்களை வரத்து குறையும் என்பதால் அனைத்து வகையான பீன்ஸ் விலையும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.