உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் விட்டு விட்டு பெய்த மழை

கொடையில் விட்டு விட்டு பெய்த மழை

கொடைக்கானல்: -கொடைக்கானலில் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயில் பளிச்சிட்ட நிலையில் மதியத்திற்கு பின் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. அவ்வப்போது தரை இறங்கிய மேகக் கூட்டம் நகரை சூழ்ந்த பனி மூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. வருகை தந்த சுற்றுலா பயணிகள் இடைவிடாது பெய்த மழையால் விடுதிகளி முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ