மேலும் செய்திகள்
மழையால் குளுமையானது 'கொடை'
07-Apr-2025
கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று 2 மணி நேரம் மிதமான மழை பெய்து ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கொடைக்கானலில் தொடர் மழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயில் நீடித்தது. இதற்கிடையே அவ்வப்போது சாரல் மழையும், தரையிறங்கும் மேகக்கூட்டம் நிலவியது. மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் 2:00 மணிக்கு தொடங்கிய மழை மாலை 4:00 மணி வரை மிதமாக பெய்தது. நகரில் தரையிறங்கிய மேகக்கூட்டம், பனிமூட்டம் என இதமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மழையும் பொருட்படுத்தாமல் பயணிகள் படகு, குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
07-Apr-2025