ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறிய ரோடு
டூவீலர்களால் இடையூறுபழநி பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது .பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலமுருகன், பழநி. ............-------- குப்பையை கொட்டி தீ திண்டுக்கல் -திருச்சி ரோடு நான்கு வழிச்சாலை ரோட்டோரங்களில் குப்பை கொட்டி தீ வைத்து எரிப்பதால் ரோடு முழுவதும் புகை மண்டலம் ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்படுகிறது .குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும். செந்தில், திண்டுக்கல். .......--------- ரோட்டில் ஓடும் கழிவுநீர் திண்டுக்கல் நாகல்நகர் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதி ராஜலட்சுமி நகர் செல்லும் ரயில்வே சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர் செல்வதால் ரோடு சேதமடைந்துள்ளது .இப்பகுதியில் நடந்து செல்வோர் பாதிக்கின்றனர். இதை சரி செய்ய வேண்டும். ராஜா, நாகல்நகர். ..................--------பட்டுப்போன மரத்தால் விபத்து திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது .மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மரம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மரத்தை அகற்ற வேண்டும் .மகேந்திரன் ,திண்டுக்கல். ............--------மின்கம்பம் சேதத்தால் விபத்து செங்குறிச்சி குரும்பப்பட்டியில் 3 ரோடு சந்திப்பு ரோட்டோரத்தில் மின்கம்பம் சேதமடைந்து இருப்பதால் விபத்து ஆபத்து அதிகம் உள்ளது. இதனை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட முன் வர வேண்டும். - --பாண்டியன், கம்பிளியம்பட்டி. .............-------- சேதமான ரோடால் சிரமம் ராமராஜபுரத்திலிருந்து வேட்டைக்காரன்புதுார் செல்லும் ரோட்டில் ஜல்லிகற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. சேதமான ரோடால் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பாதிக்கின்றனர். நிர்மல்விஜய், சாணார்பட்டி. ............... --------விபத்துக்கு வழி தரும் மூடி ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு நுழைவு வாயிலில் பஸ்கள் நுழையும் பகுதியில் போடப்பட்ட இரும்பு மூடி சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கருப்புசாமி ஒட்டன்சத்திரம்.--------...............