திருடியவர்கள் கைது
தாண்டிக்குடி: கொடைக்கானல் மச்சூரை சேர்ந்தவர் முகமது உசேன். ரோட்டோரம் பழக்கடை நடத்தி வருகிறார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த வீரமணி என்ற மணிகண்டன் 25, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் 24, இருவரும் பழம் வாங்குவது போல் முகமது உசேனின் அலைபேசியை பறித்து சென்றனர். அக்கம்பக்கத்தினர் பிடித்து தாண்டிக்குடி போலீசில் ஒப்படைத்தனர்.இவர்கள் மீது மதுரை போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.