மேலும் செய்திகள்
இரட்டிப்பான வெண்டை விலை
20-Oct-2024
வேடசந்துார் : காவிரி கூட்டு குடிநீர் திட்ட லைனில் மர்ம நபர்கள் குடிநீர் லைன் வால்வுகளை அடைத்ததால் இரு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக வேடசந்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கரூர் காவிரி ஆற்றில் உள்ள கட்டளையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, கோவிலுார், வேடசந்துார் வழியாக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி , பழநி ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் பாதையில் சாலையூர் நால்ரோடு பெட்ரோல் பங்க் எதிரில் காளாஞ்சிபட்டி செல்லும் குடிநீர் குழாயில் அமைக்கப்பட்ட வால்வுகளை சிலர் அடைத்துவிட்டனர்.இதனால் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் இரு நாட்களாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழி நெடுகிலும் உள்ள வால்வுகளை சரி செய்து கொண்டு வந்த நிலையில் இந்த அடைப்பை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இதை வேண்டுமென்றே தொழில் நுணுக்கம் தெரிந்த மர்ம நபர்கள் செய்துள்ளதால் குற்றவாளிகளை கண்டுபிடித்து தரக்கோரி, சக்கரா கன்ஸ்ட்ரக் ஷன் திட்ட கண்காணிப்பாளர் கார்த்திக், வேடசந்துார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Oct-2024