மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் உடைப்பால் தொடரும் விபத்துக்கள்
27-Jul-2025
திண்டுக்கல்: வடமதுரை அருகே பழங்குடியின இளைஞரை காதலித்து திருமணம் செய்த கல்லுாரி மாணவியை பெண் வீட்டார் அடித்து இழுத்துசென்றதோடு காதலன் வீட்டையும் அடித்து நொறுக்கி உள்ளனர். வடமதுரை அருகே வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முனியப்பன் . பழங்குடியினரான இவரின் மகன் ராஜ்குமார் 33, பி.காம்., பட்டதாரி. இவர் தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவருடன் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குமரப்பட்டியை சேர்ந்த பிரியா 19, வேலைபார்த்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இதனிடையே பிரியா வையம்பட்டியில் உள்ள கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்ந்தார். இந்நிலையில் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடிகள் வெள்ளை பொம்மன்பட்டி முருகன் கோவிலில் ஆக. 1ல் திருமணம் செய்துக்கொண்டனர். பாதுகாப்புக்கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் புகுந்தனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் பெண் விருப்பத்தின்படி கணவருடன் செல்வதென முடிவுசெய்யப்பட்டது. திருமணத்தை ஏற்க மறுத்த பெற்றோர் , உறவினர்கள், நண்பர்கள் என 20க்கு மேற்பட்டோர் கத்தி, அரிவாள், கட்டைகளுடன் ஆக. 10 இரவு 7 :00 மணிக்கு ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். வீடு ஓடுகளை பிரித்து உள்ளே குதித்து வீடை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் ராஜ்குமாரின் அக்கா சித்ரா 35,காயமடைந்தார். பிரியாவை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றனர்.வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Jul-2025