உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராளிபட்டி சந்தியாகப்பர் சர்ச் விழாவில் தேர்பவனி

ஊராளிபட்டி சந்தியாகப்பர் சர்ச் விழாவில் தேர்பவனி

நத்தம்: நத்தம் அருகே ஊராளிபட்டி சந்தியாகப்பர் சர்ச் திருவிழாவில் தேர்பவனி நடந்தது. சர்ச் திருவிழா ஜூலை 21 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நவநாள் கூட்டு திருப்பலிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தியாகப்பர் தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தியாகப்பர் எழுந்தருள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை நற்கருணை ஆசிர் , அன்னதானம் நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாதிரியார்கள் தோமினிக் சேவியர், ஜான்பிரிட்டோ, ஜெரால்டு ஸ்டீபன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !