உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இப்படி பன்றீங்களே சார்: ஊர் பெயர்களையே மாற்றி பலகை அமைப்பு : நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் குழப்பம்

இப்படி பன்றீங்களே சார்: ஊர் பெயர்களையே மாற்றி பலகை அமைப்பு : நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் குழப்பம்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் ரோடுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள், அந்த ஊருக்கும் பலகையில் இருக்கும் பெயருக்கும் தொடர்பில்லாமல் இருப்பதால் மக்களுக்கும்,பயணிகள், பள்ளி சிறுவர்களுக்கும் தவறான வழிகாட்டுதலாக உள்ளது.நான்குவழிச்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராம சாலை என அனைத்து ரோடுகளில் ஆங்காங்கே ஊர் பெயர்களை சுட்டி காட்டும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ரோடுகள் பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லும் இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டி, திசைகாட்டி பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.இந்த ரோடுகளில் பயணிக்கும் புதியவர்களுக்கு இதுவே வழிகாட்டி. இதை பார்த்தே தாங்கள் செல்ல வேண்டிய கிராமத்தை அடைவர். இந்த பலகைகள் ஏதுவும் இல்லாத இடங்களில் ஆங்காங்கே தங்களது வாகனங்களை ரோடுகளில் நிறுத்தி அவ்வழியே செல்வோரிடம் வழிகேட்டவாறே பயணிக்க வேண்டும். அவ்வாறு வழி காண்பித்தவர் ஏதேனும் தவறான தகவல் தந்தால் பல கி.மீ., பயணித்த பின்னரே வழிதவறி வந்த விஷயம் தெரியும். இத்தகைய சிரமங்கள் தவிர்க்கவே ஆங்காங்கே ரோடுகளில் ஊர்களின் பெயருடன் பலகைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை அமைக்கும் நெடுஞ்சாலை துறையினரே பல இடங்களில் வேறு ஊர் பெயருடன் பலகைகளை நிறுவியிருப்பது அலட்சிய மனோபாவத்தின் வெளிப்பாட்டிற்கு சான்றாக இருக்கிறது. இந்த பெயர் பலகைகளால் பல கிராம மக்கள், வெளியூர் பயணிகள், பள்ளி சிறுவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டம் முழுவதும் வேறு ஊர் பெயர்களை குறிப்பிடும் வகையில் தவறான தகவலாக இருக்கும் பெயர் பலகைகளை மாற்றி அமைக்க வேண்டும்.-.......................-தேவை நடவடிக்கை திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் தாமரைப்பாடி ஊராட்சியில் இருப்பது அம்மாக்குளத்துபட்டி. இங்கிருந்து டி.என்.பாரைப்பட்டிக்கு பிரிகிறது. திண்டுக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட இங்குள்ள பயணியர் நிழற்குடையில் அரை கி.மீ., துாரம் தள்ளி வடமதுரை ஒன்றியப்பகுதிக்குள் இருக்கும் மூணாண்டிபட்டி என்ற ஊரின் பெயர் உள்ளது. அய்யலுார் தங்கம்மாப்பட்டி அருகில் 'பொட்டிநாயக்கன்பட்டி' என்பதற்கு பதிலாக 'பெட்டிநாயக்கன்பட்டி' என எழுதி வைத்துள்ளனர். வெள்ளபொம்மன்பட்டி அருகில் இருக்கும் சேர்வைக்காரன்பட்டி என்ற ஊரில் 'சோலைக்காரன்பட்டி' என பலகை வைத்துள்ளனர். இதுபோல நிறைய உதாரணங்கள் உள்ளன. இவற்றை மாற்றி அமைப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தினர் கண்டிப்பான நடவடிக்கையால் மட்டுமே சாத்தியமாகும்.- ஏ.கருப்பையா, அ.தி.மு.க., விவசாய அணி ஒன்றிய செயலாளர், ஆண்டிப்பட்டி, பிலாத்து.................-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ