உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பக்தர்களுக்கு அச்சுறுத்தல்

பக்தர்களுக்கு அச்சுறுத்தல்

பழநி; பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு வெளி மாவட்ட மாநில பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் குடிமகன்களின் தொல்லையும் அதிகரிக்கிறது. முக்கிய ரோடுகளில் உள்ள கடைகளுக்கு முன்புற இடங்களில் இரவு நேரங்களில் மது குடித்து விட்டு அப்பகுதியில் அசுத்தம் செய்கின்றனர். குளத்துக்கரைகள், ஆற்றுப் பாலங்கள், பஸ் ஸ்டாப் பகுதிகள் ஆகியவற்றில் மினி பாராகவே குடிமகன்கள் பயன்படுத்துகின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி, கொடைக்கானல் ரோட்டில் அதிக சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி