உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  த.வெ.க., கொடி அகற்றம் மூவர் கைது

 த.வெ.க., கொடி அகற்றம் மூவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த த.வெ.க., கொடியை அகற்றியவரை சாதி பெயரைச்சொல்லி இழிவாக திட்டிய பெண் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் தாடிக்கொம்புவை அருகே பெரியமல்லணம்பட்டியை சேர்ந்தவர் முருகன் 19. இவரின் வீட்டில் அதேப்பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி 61, இவரின் மகன் காளிதாஸ் 33, பெத்துராஜ் 30 ,மூவரும் த.வெ.க., கட்டினர். இதை முருகன் அகற்றினார். முருகனிடம் அலைபேசியில் பேசிய பாண்டீஸ்வரி உள்ளிட்ட மூவரும் மிரட்டல் விடுத்தனர். சாதி பெயரை கூறி திட்டி உள்ளனர். மூவரையும் தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !