மேலும் செய்திகள்
சர்வேயர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு
22-Sep-2026
நிலக்கோட்டை, செப்.29- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சர்வேயரை கடத்திச் சென்று தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் காஞ்சிகுமார் 42. ஆத்துார் தாலுகாவில் சர்வேயராக உள்ளார். இவருக்கும் குண்டலப்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்த முனியாண்டிக்கும் முன் விரோதம் உள்ளது. நேற்று அணைப்பட்டி ரோட்டில் டூவீலரில் வந்த காஞ்சிக்குமாரை, முனியாண்டி, அவரது உறவினர்கள் முரளி, சின்னகாசிபாண்டியன் ஆகிய மூன்று பேரும் வழிமறித்து தாக்கினர். வேறொரு டூவீலரில் ஏற்றி வீலிநாயக்கன்பட்டி கரட்டு பகுதிக்கு கொண்டு சென்று மீண்டும் தாக்கினர். பின்னர் அவரை நிலக்கோட்டையில் இறக்கிவிட்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர். படுகாயம் அடைந்த காஞ்சிக்குமார் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நிலக்கோட்டை போலீசார் சர்வேயரை கடத்திய முனியாண்டி, முரளி, சின்னகாசிபாண்டியனை கைது செய்தனர்.
22-Sep-2026