உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காதணி விழாவில் கலந்து கொண்ட த.மா.கா., தலைவர் வாசன்

காதணி விழாவில் கலந்து கொண்ட த.மா.கா., தலைவர் வாசன்

நத்தம்: நத்தம் அருகே ரெட்டியபட்டி ஊராட்சி கவரயபட்டியில் தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அர்ச்சுணன் இல்ல காதணி விழா நடந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கலந்து கொண்டு குழந்தை விஷ்வாவை வாழ்த்தினார். முன்னாள் எம்.பி. சித்தன், த.மா.கா., மாநில செயலாளர்கள் சந்திரன், மணிக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் முனியப்பன், வட்டாரத் தலைவர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில, மாவட்ட த.மா.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை