உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து குறைவு எதிரொலி தக்காளி விலை விர்...

வரத்து குறைவு எதிரொலி தக்காளி விலை விர்...

ஒட்டன்சத்திரம்:வரத்து குறைவால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.18 க்கு விற்பனையானது.இம்மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சாலைப்புதுார், கள்ளிமந்தையம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் தக்காளி அதிகம் விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் தக்காளி வரத்து அதிகம் இருந்ததால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பெட்டிகளுக்கு மேல் வரத்து இருந்தது. இதனால் கிலோ ரூ.9 க்கு விற்பனையானது. தற்போது தக்காளி சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் மார்க்கெட்டிற்கு ஐந்தில் ஒரு பங்காக வரத்து குறைந்துவிட்டது. இதனால் விலை இரட்டிப்பாக கிலோ ரூ.18க்கு விற்பனையாகிறது. ஆந்திராவில் தேவையான அளவு தக்காளி கிடைப்பதால் வியாபாரிகள் அங்கு கொள்முதல் செய்து விடுகின்றனர். இதனால் எதிர்பார்த்த அளவிற்கு விலை ஏற்றம் இல்லை.தக்காளி கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், ஆந்திராவில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் வியாபாரிகள் அங்கு சென்று கொள்முதல் செய்து விடுகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !