உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையைடுத்து நேற்று சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மதியம் லேசான சாரல் மழை பெய்தது. நகரில் தரையிறங்கிய மேக கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. 2வது நாளாக நேற்று ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேல்மலை பகுதியான பூம்பாறை,குண்டாறு பகுதியில் மரம் விழுந்து அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ