மேலும் செய்திகள்
'கொடை'யில் 3வது நாளாக நீடித்த நெரிசல்
04-Oct-2025
கொடைக்கானல்: கொடைக்கானலில் வார விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் முகா மிட்டனர். வார நாட்களில் பயணி களின் வருகை இன்றி மலை நகர் வெறிச்சோடியது. கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநில பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இங்குள்ள பிரையன்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்களில், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் ரசித்தனர். தொடர்ந்து ஏரியில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். வழக்கத்திற்கு மாறாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் இத்தருணத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இருந்தபோதும் மாலை காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது குறிப்பிடத்தக்கது.
04-Oct-2025