உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் சுற்றுலா பயணிகள்

கொடை யில் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: - கொடைக்கானலில் தொடர் விடுமுறையடுத்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் சில வாரங்களுக்கு முன் தொடர் மழை பெய்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானலின் குளுமையை அனுபவிக்க பயணிகள் வருகை தந்தனர்.புனித வெள்ளி, வார விடுமுறையடுத்து ஏராளமான பயணிகள் மலை நகரில் முகாமிட்டனர். இங்குள்ள பிரையன்ட் , ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் கண்டு ரசித்தனர். படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகளை அனுபவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ