மேலும் செய்திகள்
கார் மோதி முதியவர் பலி
16-Aug-2025
வேடசந்துார் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் வேதமணி 55. கரூரில் இருந்து மதுரைக்கு புதிய டிராக்டரை ஓட்டி சென்றார். விட்டல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது. டிராக்டர் டிரைவர் துாக்கி வீசப்பட்ட நிலையில் டிராக்டர் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. மோதிய கார் சென்டர் மீடியேட்டரில் ஏறி நின்றது. டிராக்டர் டிரைவர் , காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் பவானி பெரிய புலியூரை சேர்ந்த தொழிலதிபர் ஜோதிகிருஷ்ணன் 54, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். காரில் வந்த ஜோதிகிருஷ்ணன் மனைவி ,இரு பிள்ளைகளும் காயமின்றி தப்பினர். வேடசந்துார் எஸ்.ஐ., சிவகுமார் விசாரிக்கிறார்.
16-Aug-2025