டிராக்டர்கள் பறிமுதல்
வடமதுரை: திருமலைக்கேணி பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே கற்களை ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை மடக்கினர். டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் அரசு இடத்தில் அனுமதியின்றி பாறைக்கற்கள் வெட்டி எடுத்தது தெரிந்தது. டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். டிராக்டர்களை ஓட்டி வந்த கம்பளியம்பட்டி ஆண்டியபட்டி வெங்கடாஜலம், பாலமுருகன் ஆகியோரை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.