உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் போக்குவரத்து மாற்றம்

 பழநியில் போக்குவரத்து மாற்றம்

பழநி: பழநியில் தைப்பூச திருவிழாவிற்கு அதிக பாதயாத்திரை பக்தர்கள் வந்ததால் நகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அதிகளவில் பாதயாத்திரை பக்தர்கள் வருவது அதிகரித்துள்ளது. வெளியூர் செல்லும் பக்தர்களுக்கு, தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயில் சார்பில் 3 பஸ்கள் நகரை சுற்றிலும் இலவசமாக இயக்கப்பட்டு, அந்த பஸ்கள் வெளியூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்திற்கு செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. அடிவாரம் செல்லும் பாதையில் கனரக வாகனங்கள் இயக்கப்படாமல் மாற்று வழியில் தற்காலிக 'பார்க்கிங்' இடங்களில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 'பார்க்கிங்' நிரம்பியதால் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தி சென்றனர். நகரத்தார், நாட்டார் காவடிகள் பழநியில் முகாமிட்டு உள்ளனர். டி.ஐ.ஜி., சாமிநாதன் தலைமையிலான 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டூவீலர் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை