உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோபால்பட்டியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு

கோபால்பட்டியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு

கோபால்பட்டி: -கோபால்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் சாலையோர வாரச்சந்தை கடைகளாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோபால்பட்டியில் இருந்து அய்யாபட்டி, வேம்பார்பட்டி, மொட்டையகவுண்டன்பட்டி, கோம்பைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல கோபால்பட்டி மையப் பகுதியாக உள்ளதால் பொருட்கள் வாங்க கிராம மக்கள் அதிகம் வருவதால் இச்சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக உள்ளது. கோபால்பட்டி சாலையில் சிலர் கடைகள் அமைத்தும், வாரச்சந்தை கடைகள் அமைத்தும், சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவு நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறுடன் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது.இதோடு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் கூட வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது. வார சந்தை நாட்களில் சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து சாலையின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. சந்தை கடைகளை சாலைகளில் அமைக்காமல் சந்தைக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி இரா.பிரபாகரன், மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, வீரசின்னம்பட்டி: நத்தம்- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கோபால்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபால்பட்டியில் வாரச் சந்தைக்கு என இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். சாலையில் வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது. சாலையோரம் கடைகள் அமைக்கப்படுவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். தேவை போலீஸ் நடவடிக்கை ஆர்.எப்.சி. ராஜ்கபூர், வட்டார காங்கிரஸ் தலைவர், கோபால்பட்டி : சாலையில் வாகனங்கள், ஆட்டோக்கள் அதிகளவு நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் விபத்துக்கள் அதிக அளவு நடக்கிறது. சாலை நெடுகிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்துக்கு இடியூறாக சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதுபோலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ