உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் 3வது நாளாக நீடித்த நெரிசல்

கொடையில் 3வது நாளாக நீடித்த நெரிசல்

கொடைக்கானல்:தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 3வது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக் கானலில் முகாமிட்டனர். பயணிகளின் வருகையால் நகர் பகுதியில் நேற்று அப்சர்வேட்டரி. ஏரிச்சாலை, பாம்பார்புரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. நகரின் பிரதான பகுதியில் இருந்து சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல பயணிகள் அவதியடைந்தனர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரியில் படகு, ஏரிச் சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த சந்திப்பு பகுதியில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை