போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்: திண்டுக்கல்- திருச்சி பைபாஸ் ரோட்டில் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நாலாபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை ஒழுங்கும்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரே நேரத்தில் கனரக வாகனங்கள், டூவீலர்கள் முண்டியடித்து முன்னேறியதால் சிரமம் ஏற்பட்டது. இருபது நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.