உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு தினமலர் நாளிதழுக்கு ரயில் உபயோகிப்பாளர் நன்றி

அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு தினமலர் நாளிதழுக்கு ரயில் உபயோகிப்பாளர் நன்றி

பழநி: பாலக்காடு - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்புக்கு காரணமான தினமலர் நாளிதழுக்கு பழநி ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்கம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பழநி ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்கம் மாதாந்திர கூட்டம் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பழநி வழியே சென்ற திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தினமலர் நாளிதழ், மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பழநியில் இருந்து சென்னைக்கு இரவு நேர ரயில் சேவையை துவக்கவும் வலியுறுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் சீனிவாசன், பாலாஜி,நாகராஜன் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ