பயிற்சி முகாம்
வடமதுரை;அய்யலுார் பேரூராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. செயல் அலுவலர் சூசை இன்ப ராஜேஷ் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார புள்ளிவிபர நிபுணர் பாலசுப்பிரமணி, வட்டார புள்ளிவிபர இன்ஸ்பெக்டர் சித்ரா பயிற்சி தந்தனர்.