உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்று வழியில் சென்ற ரயில்கள்

மாற்று வழியில் சென்ற ரயில்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் வழித்தடங்களில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகளால் குருவாயூர்,மும்பை,கோவை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் திண்டுக்கல் வராமல் மாற்று வழியில் சென்றன.திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் உள்ள கூடல்நகர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாளங்கள், மின் ஒயர்களில் பராமரிப்பு பணிகள் நடந்தது. கோவை எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ் பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருதுநகர், காரைக்குடி,மானாமதுரை, திருச்சி வழியாக திண்டுக்கல் வராமல் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை