உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொல்லை தந்த உறவினரை கொன்று புதைத்த திருநங்கை

தொல்லை தந்த உறவினரை கொன்று புதைத்த திருநங்கை

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரப்பட்டி அருகே வேலாயுதம்பாளையம் புதுாரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முத்துசாமி, 31. இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள், உறவினரான திருநங்கை வைதேகி, 40, என்பவருடன் சித்தரேவு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். மாரியம்மாள், கணவர் மாயமானதாக மே 2ல் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், அவர்கள் வீட்டின் முன் மண் குவியலுடன் எம் சாண்ட் கொட்டப்பட்டு இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மே 7ல் தாசில்தார் பிரசன்னா, டி.எஸ்.பி., தனஞ்செயன் முன்னிலையில் அப்பகுதியை தோண்டியதில் முத்துசாமியின் உடல் கிடைத்தது.முத்துசாமி பாலியல் தொல்லை கொடுத்ததால், வைதேகி அவரை அடித்து கொன்றது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Matt P
மே 10, 2025 12:10

கொலை படுபாதகமா இருந்தாலும் அவரை தற்காத்து கொள்ளாதது அவர் தவறு. மனிதர்களுக்கு எப்போது வெறி வரும் என்று அவர்களுக்கே தெரிவதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். எந்த பாலினராக இருந்தாலும் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவோம். பொறுமை இழந்த திருநங்கை கொலைக்கு பதில் அவர்களிடமிருந்து தனித்து போயிருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை