உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் மழை பூக்களை ரசித்த பயணிகள்

கொடை யில் மழை பூக்களை ரசித்த பயணிகள்

கொடைக்கானல்:கொடைக்கானலில் பெய்த மிதமான மழையில் குடைபிடித்து மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் குளு குளு நகரான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் முகாமிட்டு வருகின்றனர். இங்கு நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் ,இதமான சீதோஷ்ண நிலையை பயணிகள் ரசித்தனர். தொடர்ந்து சாரல் மழை பெய்த நிலையில் குடை பிடித்து பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர்.தாண்டிக்குடி கீழ் மலைப் பகுதியிலும் அரை மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. விவசாய பாசனம், குடிநீர் தேவைக்கு பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழையால் நிம்மதி அடைந்தனர். தற்போது பெய்த மழை மலைத் தோட்ட பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி