சூறைக்காற்றால் ரோட்டில் சரிந்த மரம்
தாண்டிக்குடி: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியதால் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பதித்தது.தாண்டிக்குடி கீழ்மலை பகுதிகளான காமனுார், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே.சி. பட்டி, ஆடலுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவிலிருந்து பலத்த சூறைக்காற்று வீசியது. சாரல் மழையும் நீடித்தது. கொடைக்கானல் நகர், மேல்மலை பகுதிகளிலும் பலத்த காற்று வீசியதால் வீட்டின் கூரைகள் பறந்தன. தாண்டிக்குடியில் நேற்று காலை 5:00 மணிக்கு வத்தலக்குண்டு தாண்டிக்குடி ரோட்டில் ராட்சத மரம் விழுந்தது. 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்கள் ,தன்னார்வலர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். நெடுஞ்சாலைதுறையின் மெத்தனப் போக்கால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.சூறை காற்றால் மலைப்பகுதியில் தொடர் மின்தடை நீடித்தது .விடு சுவர் இடிந்ததுநத்தம் : சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. ந.அய்யாபட்டியை சேர்ந்த ஜெயநாதன் 55, வீட்டின் உள்பக்கம், வெளிப்பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமாகின. நத்தம் கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் விசாரித்தார்.