மேலும் செய்திகள்
உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை
22-Sep-2025
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வான்கோழி கறி விற்பனை ஜோராக நடந்தது. தீபாவளிக்கு அசைவ உணவு இல்லாமல் பண்டிகை முழுமை அடையாது. இதற்காக, நேற்று முன்தினம் இரவிலிருந்தே திண்டுக்கல்லில் கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இறைச்சிக்கடைகளில் கோழி, ஆடு, மீன் விற்பனை களைகட்டியது. இதற்கு இணையாக திண்டுக்கல்லில் வான்கோழி கறி விற்பனையும் ஜோராக நடந்தது. அதிகாலை முதலே வான்கோழி கறி வாங்குவதற்கு பொதுமக்கள் கறிக்கடைகளில் முண்டியடித்தனர். இதனால் கடும் கிராக்கி ஏற்பட்ட வான்கோழி ரூ.600க்கு விற்பனையானது. இதுபோல, நாட்டுக்கோழி ரூ.600, பிராய்லர் கோழி ரூ.200 (தோல் உரிக்காதது), ரூ.240 (தோல் உரித்தது), ஆடு ரூ.ஆயிரம் முதல் 1200 வரை விற்பனையானது.
22-Sep-2025