உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளையாட்டு வீரர்களுக்கு நாளை நடக்கிறது டி.வி.ஆர்., நினைவு விருது வழங்கும் விழா

விளையாட்டு வீரர்களுக்கு நாளை நடக்கிறது டி.வி.ஆர்., நினைவு விருது வழங்கும் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நாளை (அக்.2) விளையாட்டு வீரர்களுக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு விருது வழங்கும் விழா நடக்கிறது .திண்டுக்கல் வி.ஜி., கல்வி அறக்கட்டளை ,பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது வழங்கும் விழா திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள ஜே.கே.ஆர்., கராத்தே பயிலகத்தில் நாளை மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. விழாவில் ஹாக்கி சங்க மாவட்ட தலைவர் காஜாமைதீன் தலைமை வகிக்கிறார்.வி.ஜி., அறக்கட்டளை செயலர் ஞானகுரு வரவேற்கிறார். மாநகர தி.மு.க.,கழக்கு செயலாளர் ராஜேந்திரகுமார், ஜான் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிறுவனர் ஜான் ஆரோக்கியசாமி,ஹாக்கி துணைத்தலைவர் அரபு முகமது, முகமது சுல்தான் ,ரவீந்திரன், ஜெகதீஸ் ராமமூர்த்தி, ஜீவானந்தன்,ஷாக்கி சங்கர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட கால்பந்து கழக செயலர் சண்முகம் , நெட்பால் சங்க தலைவர் செல்வகனி விருதுகளை வழங்குகின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய ஹாக்கி வீராங்கனை மேக்லின் ஜூலியட் பங்கேற்கிறார்.மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க செயலாளர் ராஜகோபால் நன்றி கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ