உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்துக்களே திரள்வோம் போஸ்டர் ஒட்டிய இருவர் கைது;போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ஹிந்துக்களே திரள்வோம் போஸ்டர் ஒட்டிய இருவர் கைது;போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

வேடசந்துார் : வேடசந்துாரில் 'காக்க காக்க திருப்பரங்குன்றம் காக்க ஹிந்துக்களே திரள்வோம், அன்னியர்களின் சதியை போக்க' என போஸ்டர் ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடர்பாக பிப்.4 மாலை 3:00 மணிக்கு திருப்பரங்குன்றத்தை நோக்கி வ.உ.சி., மக்கள் இயக்கம், வேடசந்துார் தொகுதி என போஸ்டர் ஒட்டினர். எஸ்.ஐ., கோபால் தலைமையிலான போலீசார் போஸ்டர் ஒட்டிய ராஜகோபாலபுரம் கார்த்திக் 30, அருண்குமார் 30, ஆகிய இருவருவரையும் கைது செய்தனர். இதை கண்டித்துவ.உ.சி., மக்கள் இயக்கத்தினர், ஒக்கலிகர் இளைஞர் பேரவை அமைப்பினர் வேடசந்துார் ஸ்டேஷன் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை