மேலும் செய்திகள்
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
12-Nov-2024
திண்டுக்கல்;மதுரையிலிருந்து கேரளாவிற்கு பழநி வழியாக பார்சல் சர்வீஸ் லாரி மூலம் 2 டன் ரேசன் அரிசியை மூடைகளில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிந்து லாரி,ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மதுரையிலிருந்து கேரளாவிற்கு திண்டுக்கல் மாவட்டம் பழநி சத்திரப்பட்டி வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் காலை முதல் போலீசார் பழநி சத்திரப்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி சிறியளவிலான மூடைகளில் இருந்தது. லாரியை ஓட்டி வந்த மதுரை வாடிப்பட்டி மேலக்கல் பகுதியை சேர்ந்த டிரைவர்மகேந்திரனை31,போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கண்ணன்,ரேஷன் அரிசியை அவருக்கு தெரிந்த ஊர்களில் குறைந்த விலைக்கு வாங்கி மதுரை திருப்பாலையை சேர்ந்த கணேஷ்குமாருக்கு கொடுத்துள்ளார். கணேஷ்குமார்,தான் நடத்தும் பார்சல் சர்வீஸ் லாரிகள் மூலமாக கேரளா பாலக்காட்டிற்கு ரேஷன் அரிசியை கடத்தியதுதெரிந்தது. போலீசார் கணேஷ்குமாரை,கைது செய்து தலைமறைவாக உள்ள கண்ணன்,ரேஷன் அரிசியை விலைக்கு வாங்க முயன்ற கேரளாக்காரரை தேடுகின்றனர். 2 டன் ரேஷன் அரிசி,கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
12-Nov-2024