போக்சோவில் இருவருக்கு சிறை
திண்டுக்கல் : தாடிக்கொம்பு அருகே அழகுபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வமுருகன் 51. 2023ல் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.இதில் செல்வமுருகனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். இதுபோல் பட்டத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் 28. 2023ல் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அய்யப்பனுக்கு 3ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.