உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் திருவிழா தகராறில் இரு தரப்பினர் மோதல்;- 17 பேர் கைது

கோயில் திருவிழா தகராறில் இரு தரப்பினர் மோதல்;- 17 பேர் கைது

நத்தம்: நத்தம் அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சி வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் மணிகாத்தான் 48.அதே ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டன் 47. இவர்கள் இருவருக்கும் கோயில் திருவிழா சாமி கும்பிடுவது தொடர்பாக கடந்த 3 மாத காலமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு மீண்டும் இருவருக்கும் தகாத வார்த்தைகளால் திட்டி வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதில் இருவரும் தங்களது உறவினர்களை வரவழைத்து மந்தை முன்பு ஒருவருக்கொருவர் கட்டையால் அடித்தும், வீடுகளை நொறுக்கியும் தாக்குதலில் ஈடுபட்டனர். 10 -க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து நத்தம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், பாலகிருஷ்ணன் 39, வீரணம்பலம் 50, திருப்பதிராஜா 29, சஞ்சய் 24, அழகு 30, அம்மாசி 47, சதீஸ்குமார் 32, வெள்ளைச்சாமி 32, பூமி 29, பரதன் 37, காத்தமுத்து 63, பாலகிருஷ்ணன் 37, தென்னரசு 30, வெள்ளைச்சாமி 57, முருகன் 42, அர்ஜுனன் 35, சின்னையா 44, உள்ளிட்ட 17 பேரை நத்தம் கைது செய்தனர். தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை