டூவீலர்கள் ஏலம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 டூவீலர்கள் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டது.ஏ.டி.எஸ்.பி.,மகேஷ் தலைமையில் அரசு தானியங்கி பணிமனையை சேர்ந்த உதவி பொறியாளர் வரதராஜன் முன்னிலையில் ஏலம் எடுத்தவர்கள் ஜி.எஸ்.டி., 18 சதவீதம் உட்பட முழு தொகையை செலுத்தி வாகனத்தை பெற்று கொண்டனர். திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி., முருகன், இன்ஸ்பெக்டர்கள் வசந்த், லாவண்யா, எஸ்.ஐ., சரவணன் பங்கேற்றனர்.