என்றைக்குமே கை நம்மை விட்டு போகாது வேடசந்துார் திருமண விழாவில் உதயநிதி பேச்சு
வேடசந்துார்: -'' என்றைக்குமே கை நம்மை விட்டு போகாது '' என துணை முதல்வர் உதயநிதி கூறினார். வேடசந்துார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் மகன் ஸ்ரீகாந்த், வீரவர்ஷினி திருமணத்தை தலைமை வகித்து நடத்தி வைத்த அவர் பேசியதாவது: திருமணத்தை முதல்வரின் வாழ்த்துக்களுடன் நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மண்டல மாநாடா , கட்சி மாநாடா என வியக்கும் வகையில் திருமண விழா நடைபெற்று வருகிறது. உங்களின் எழுச்சி அன்பை பார்க்கும் போது உங்களின் நம்பிக்கை பிரகாசமாக தெரிகிறது. என்றைக்குமே கை நம்மை விட்டு போகாது. வீராசாமிநாதன் மிகதுாய்மையான உடன்பிறப்புகளில் ஒருவர் என்றார். அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ., க்கள் காந்திராஜன், செந்தில்குமார், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் மேகலா பங்கேற்றனர்.