உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் அறிவிக்காத மின்வெட்டுகளால் அவதி: வெயிலின் தாக்கம் குறையாததால் பரிதவிப்பு

மாவட்டத்தில் அறிவிக்காத மின்வெட்டுகளால் அவதி: வெயிலின் தாக்கம் குறையாததால் பரிதவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.மாவட்டத்தை பொறுத்தவரையில் கோடை காலத்தை விட ஜூன் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது பெய்யும் சிறுமழை வெயிலை தணிக்காமல் புழுக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் மின் தேவை வழக்கத்தை விட அதிகமாகிறது. தண்ணீருக்கான மோட்டார் தொடங்கி மின்விசிறி, குளிர்சாதன உபகரணங்கள் வரை அதிகமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்படாமல் பல இடங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் அதிகளவில் இந்த மின்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை என்கின்றனர் மக்கள் .மின்வெட்டு ஏற்பட்டு சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடுகிறது என்றாலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின் அழுத்த குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின்விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல் அவதிப்படுவதோடு அவை பழுதாகியும் விடுவதாக புகார் எழுகிறது. மின்வெட்டு, மின் அழுத்த குறைவு காரணமாக மக்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதியோரும், குழந்தைகளும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மாதந்தோறும் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு நாள் முழுவதுமே மின்சார துண்டிப்பு வழக்கமாக நடக்கும் வேளையில் இவ்வாறு அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்களை அவதிக்குள்ளாக்குகிறது.................உரிய நடவடிக்கை அவசியம்மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இருப்பினும் மின்வெட்டு தொடர்ந்து ஏற்படுகிறது. கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. பள்ளி, கல்லுாரி திறந்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கனகராஜ், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர், பழநி....................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை